பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர், கோவில் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சினையைத் திசைத் திருப்புவதற்காக தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி போலீசிடம் சிக்கிக்கொண்டுள்ளார்

சென்னை திருவேற்காட்டை அடுத்த அயனம்பாக்கத்தில் வசித்து வருபவர் பரமானந்தம். இவர் பாஜகவின் எஸ்.சி. பிரிவு, திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளராக உள்ளார். இந்நிலையில் கடந்த புதன்கிழமை (செப்.20) இரவு, இவரது வீட்டில் யாரோ மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் வீட்டின் அறையிலிருந்த சோபாவில் விழுந்து வெடித்தது. இதனால் சோபா முழுவதும் தீப்பிடித்து சேதமடைந்தது. மேலும் வீட்டிலிருந்தவர்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. இது குறித்து திருவேற்காடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், கோவில் சொத்து தகராறில் ஏற்பட்ட பிரச்சினையைத் திசைத் திருப்புவதற்காக, பரமானந்தம் தனது வீட்டில் தானே பெட்ரோல் குண்டு வீசி விட்டு நாடகமாடியது தெரிய வந்தது. இதனையடுத்து பரமானந்தம் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை, புழல் சிறையிலடைத்தனர்.

Leave A Reply

%d bloggers like this: