பெங்களூரு,
வருமானவரித்துறை அதிகாரியின் மகன் கடத்தப்பட்டு பின்னர் சடலமாக கண்டெடுக்கப்பட்டிருப்பது பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் கடந்த 12ம் தேதி வருமான வரித்துறை அதிகாரியின் மகன் உல்லாலில் உள்ள வீட்டிலிருந்து நண்பரை பார்க்க போவதாக கூறி ஷரத் என்ற இந்த 19 வயது பொறியியல் மாணவர் சென்றார். இரவு வெகு நேரம் ஆகியும் திரும்பி வராததால் பெற்றோர், காவல் துறையில் புகாரளித்தனர். செல்போனில் பலமுறை அழைத்தும் பதில் இல்லாத நிலையில் பெற்றோருக்கு வாட்ஸ் அப்பில் இளைஞர்கள் பேசுவது போன்ற வீடியோ ஒன்று வந்தது.
அதில் தாம் கடத்தப்பட்டுள்ளதாகவும், கடத்தல்காரர்கள் ரூ.50 லட்சம் கேட்பதாகவும் இளைஞர் கூறியுள்ளார். இநந்லையில் புறநகர் பகுதியான கெங்கேரியில் உள்ள ரச்சினஹல்லி ஏரியில் அவரது சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாணவரின் உறவினரான விஷால் மற்றும் அவரது கூட்டாளிகள் சேர்ந்து ஷரத்தை கடத்தியதாக கூறப்படுகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.