மதுரை;
டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 18 பேரை, கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் தகுதிநீக்கம் செய்து, தமிழக சட்டப்பேரவைத் தலைவர் ப. தனபால் உத்தரவிட்டார்.
இதை எதிர்த்து, 18 எம்எல்ஏ-க்களும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில் மதுரையைச் சேர்ந்த கே. கே. ரமேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ‘18 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்தது செல்லாது’ என அறிவிக்கக் கோரி புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

இன்று  மனு விசாரணைக்கு வந்த போது, ஏற்கனவே இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளதால், புதிதாக ஒரு பொதுநல மனுவை விசாரிப்பது தேவையற்றது என்று கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

Leave A Reply