.

RSS ன் நோக்கங்களை, ஒரு பொதுக்கூட்ட மேடையில் வைத்து ஒரு மாநில முதல்வர் பிரித்து மேய்வதெல்லாம் கேரளாவை தவிர எங்கும் காண முடியாதது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில சுயாட்சி மாநாட்டில் கேரள முதல்வர் பினராயி விஜயன் பேசிய கருத்துகளில் சில.

1. 1959ல் கேரளாவில் பெரும்பான்மை பெற்றிருந்த அரசை மத்திய அரசு அதிகார துஷ்பிரயோகத்தால் கலைத்தது. அன்றிலிருந்தே மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்குமான மோதல் போக்கு பல்வேறு விவாதங்களை எழுப்பி வருகிறது.

2. அரசியல் சாசனம் கூட்டாட்சி முறையைத்ததான் வற்புறுத்தி வருகிறது. அரசியல் சட்ட அமைப்பில் கூட்டாட்சி தத்துவமே முதன்மையானது என்பதை எந்த காலத்திலும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த கூட்டாட்சி தத்துவத்தை வலுப்படுத்த நாம் செயலாற்ற வேண்டுமே தவிர பலவீனப்படுத்துவதை அனுமதிக்க கூடாது.

3. கூட்டாட்சி தத்துவத்தை தகர்ப்பது என்ற நிலையை நோக்கி RSSம் சங் பரிவார அமைப்புகளும் செயல்படுகிறார்கள்.

4. இவர்கள் மாநிலங்களை பலவீனப்படுத்துவதையே நோக்கமாக கொண்டு செயல்படுகிறார்கள்.

5. RSS வழிநடத்தும் பிஜேபி அரசால் நம்முடைய கூட்டாட்சி தத்துவம் மிகப்பெரிய தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது.

6. கூட்டாட்சி தத்துவத்தை இல்லாமல் ஆக்கி இந்தியாவை ஹிந்து, ஹிந்தி, ஹிந்துஸ்தான் என்ற ஒற்றை நிலையை நோக்கி தள்ள முயல்கிறது RSS. இந்த சதிகளை முறியடிக்க வேண்டிய நிலையில் நாட்டு மக்களாகிய நாம் இருக்கிறோம்.

7. கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதலை துவக்கியது காங்கிரஸ் கட்சி. அவர்களை விட வேகமாக அந்த தாக்குதலை தற்போது புதிய எல்லைகளுக்கு எடுத்துச் சென்று கொண்டிருக்கிறார்கள் RSS பிஜேபியை சார்ந்தவர்கள்.

ஆமாம் அந்த பலவீனமான குரலில் அவ்வளவு கம்பீரம்!

  •  தோழர் ரங்கநாதன்

Leave A Reply