சென்னை: வங்கிகளுக்கு வருகின்ற செப் 29ஆம் தேதி முதல் ஆக் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் பொது மக்கள் முன்னதாகவே வங்கி பரிவர்த்தனைகளை முடித்துக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதிலும் வருகின்ற செப்டம்பர் 29 மற்றும் 30ஆம் தேதிகளில் ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அக்டோபர் 1ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் 2 ஆம் தேதி காந்தி ஜெயந்தி என்பதாலும் வங்கிகளுக்கு தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வங்கி பரிவர்த்தனைகளை முன்கூட்டியே முடித்து கொள்ளுமாறு பொதுமக்களுக்கு வங்கி நிர்வாகங்கள் அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.