மன்னார்குடி
செப்21
ரயில்வே பெண் ஊழியர்களிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபடும் ரயில்வே பொறியாளர் மணிவண்ணன்-ஐ கைது செய்ய வேண்டும் பணி நீக்கம் செய்ய வேண்டும் என டிஆர்இயு தமிழக காவல்துறைக்கும் தெற்கு ரயில்வே நிர்வாகத்தையும் கேட்டுக் கொண்டுள்ளது. இது பற்றி டிஆர்இயு-வின் உதவி பொதுச் செயலாளர் டி. மனோகரன்  அனுப்பி உள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தண்டவாள பராமரிப்பு பொறியாளராக உள்ள மணிவண்ணன் என்பவர் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தெற்கு ரயில்வே மஸ்த்தூர் யூனியனின்  திருச்சி கோட்ட தலைவராகவும் உள்ளார் இவரின் கீழ் 150க்கும் மேற்பட்டோர் பராமரிப்பு பணியாளர்களாக பணியாற்றுகிறார்கள். இதில் நாற்பதுக்கும் மேற்பட்டவர்கள் பெண் ஊழியர்கள். இவர்களில் 18 பெண் ஊழியர்கள் மணிவண்ணன் மீது பாலியல் குற்றம் சாட்டி உள்ளனர். இவர்கள் அனைவருமே கேரளாவை சார்ந்த 20 முதல் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் வீடியோ சாட்டிங் செய்ய இரவு நேரத்தில் அழைக்கிறார், விடுப்பு பெற தன் வீடு, அல்லது யூனியன் அலுவலகம் வரவழைத்து அத்துமீறி பேசியபின்தான் விடுமுறை தருவது, தங்கி இருக்கும் வீட்டிற்கு அடிக்கடி இரவு நேரத்தில் வருவது, குளித்து கொண்டு இருந்தால் பாத்ரூம் வாசலிலே நிற்பது, மாற்றல் விண்ணப்பத்தில் கையெழுத்து கேட்டால் உல்லாசத்திற்கு அழைப்பது போன்ற கடுமையாக பாலியல் குற்றச்சாட்டுகள் ஆகும்.
அதில் பபிதா என்ற பெண் ஊழியர் , எனக்கு 10 மற்றும் 8 வயதில் இரண்டு குழந்தைகள்  இருக்கிறார்கள். வீட்டில் பணி இருப்பதாக ஒருநாள் என்னை வரச்சொன்னார். வீட்டிற்கு சென்றவுடன் லைட்டுகளை அணைத்தார்.மேலும் என்னை நெருங்கினார். நான் கூச்சலிட்டு தப்பித்தேன் என புகாரில் தெரிவித்து இருக்கிறார்.
இந்த புகார்களை மேல்நடவடிக்கைக்காக திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர்  உதயகுமர் ரெட்டிக்கும், ரயில்வே வாரியம், ரயில்வே அமைச்சர்,  பெண் ஊழியர்கள் பாலியல் புகார்கள் விசாரிக்கும் துறைக்கமிட்டி, மாநில அரசு தலைமைச் செயலாளர், மாநில தலைமை காவல்துறை இயக்குனருக்கும் இந்த இளம் ரயில்வே பெண் ஊழியர்கள்அனுப்பி இருக்கிறார்கள். புகார் தந்த பின்பு குண்டர்கள் பின் தொடர்கிறார்கள் அச்சுறுத்துகிறார்கள் என அச்சத்தோடு டி.ஆர். இ. யு சங்கத்தின் உதவிப் பொதுச் செயலாளர் பேபி ஷகிலாவிடம் முறையிட்டு இருக்கிறார்கள். மஸ்த்தூர் சங்கத்தின் அங்கீகார அதிகாரம், உயர் அதிகார ரயில்வே பதவி, பணம் செல்வாக்கு இவைகளை பயன்படுத்தி  வக்ரச் செயலில் துணிச்சலாக ஈடுபட்ட மணிவண்ணன், மஸ்த்தூர் கோட்ட தலைவரை நிர்வாகம் உடனே பணி நீக்கம் செய்ய வேண்டும்.  கைது செய்து பாரபட்சமில்லாமல்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என தட்சிண ரயில்வே எம்ப்ளாயிஸ் யூனியன் கோருகிறது. நிர்வாகம் தவறினால் போராட ரயில்வே ஊழியர்கள் ரோட்டில் இறங்குவோம். இவ்வாறு தனது அறிக்கையில் டி. மனோகரன் தெரிவித்துள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: