மும்பை;
‘நிழல் உலக தாதா’  தாவூத் இப்ராஹிமை இந்தியாவுக்கு கொண்டுவந்து, தேர்தல் ஆதாயம் தேட பாஜக முயற்சிப்பதாக நவ நிர்மான் சேனா தலைவரும், சிவசேனா தலைவர் பால் தாக்கரே-வின் மருமகனுமான ராஜ் தாக்கரே உள்குத்து குத்தியுள்ளார்.நவ நிர்மான் சேனாவின் முகநூல் பக்கத்தை வியாழனன்று ராஜ் தாக்கரே துவக்கி வைத்தார். அப்போது பேசுகையில் அவர் பாஜக-வை கடுமையாக சாடினார்.
‘நிழலுலக உலக தாதா’ தாவூத் இப்ராஹிம், தற்போது மிகவும் மோசமான உடல் நிலையுடன் இருப்பதாக கேள்விப்பட்டேன்; அவர் தனது கடைசி நாட்களில் இந்தியாவில் இருக்க விரும்புவதாகவும் தெரிகிறது; இதை பயன்படுத்தி, 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அரசியல் ஆதாயம் பாஜக தேட முயற்சிக்கிறது” என்று குறிப்பிட்டார்.
அதேபோல மும்பை – அகமதாபாத் புல்லட் ரயில் திட்டம்’ எந்த விதத்திலும் மக்களுக்கு பயன் அளிக்காது; உண்மையை சொல்லப்போனால், அது வெறும் வெட்டிச்செலவு தான் என்று தெரிவித்துள்ள ராஜ் ராக்கரே, மோடி தலைமையிலான மத்திய அரசின் திட்டங்கள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு பயன் அளிக்காது என்றும், இத்திட்டங்களையும் வெறும் அரசியல் ஆதாயங்களுக்காக மட்டுமே பாஜக அரசு அறிவித்து வருவதாகவும் குற்றம் சாட்டினார்.

Leave a Reply

You must be logged in to post a comment.