திருவனந்தபுரம்;
கேரள மாநிலத்தின் முதல் பெண் டிஜிபி-யாக, ஸ்ரீலேகா பதவி ஏற்கவுள்ளார். தற்போது சிறைச்சாலை இயக்குநராக இருக்கும் ஸ்ரீலேகா, காவல்துறையில் 30 ஆண்டு அனுபவம் பெற்றவர் என்ற நிலையில், அவரின் பணித்திறனைக் கருத்தில் கொண்டு, டிஜிபி-யாக தகுதி உயர்த்தி கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளத்தில், மொத்தம் 12 டிஜிபி-க்கள் பதவி ஏற்க உள்ளனர். இவர்களில் சட்டம் – ஒழுங்கு டிஜிபி-யாக ஸ்ரீலேகாவை கேரள அரசு நியமித்துள்ளது.
ஊழலுக்கு எதிராகப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டவர் என்று கூறப்படும் ஸ்ரீலேகாவின் கணவர், குழந்தைகள் அறுவைச் சிகிச்சை மருத்துவர் ஆவார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

Leave a Reply

You must be logged in to post a comment.