கோவை, செப். 20 –
கணபதி பகுதியில் காய்ச்சலுக்கு பத்து வயது சிறுமி ஒருவர் செவ்வாயன்று பலியானார். இப்பகுதியில்  நீண்டநாட்களாக பரமரிக்கப்படாத பொதுக்கழிப்பிடத்தின் காரணமாகவே நோய்பரவுவதாக குற்றம் சாட்டி கழிப்பிடத்தை இடிக்க பொதுமக்கள் முயற்சித்த சம்பவம் புதனன்று பரபரப்பை ஏற்படுத்தியது.

கோவை மாநகராட்சி 47 வார்டுக்கு  உட்பட்ட பகுதி பாலன் நகர் செக்கான் தோட்டம்.
இங்குள்ள  குடியிருப்பு பகுதியில் பல வருடங்களாகபயன்பாடு இல்லாமல் பொது கழிப்பிடம் உள்ளது. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதோடு மக்கள் குடியிருக்க முடியாத நிலை உள்ளது. இதனையடுத்து இப்பகுதியினர் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் இந்த கழிப்பிடத்தை இடிக்க வேண்டும் என புகார் தெரிவித்திருந்தனர். ஆனால், மாநாகராட்சி அதிகாரிகள்
எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த பொதுகழிப்பிடத்தில் மழை நீர்உட்பட
கழிவு நீரும் தேங்கியவாறே உள்ளது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த தாஜ் என்ற 11 வயது சிறுமி செவ்வாயன்று  காய்ச்சல் காரணமாக பரிதாபமாக உயிரிழந்தார்.
மாணவியின் என்ற உயிரிழப்புக்கு இந்த பொது கழிப்பிடத்தினால் ஏற்பட்ட சுகாதாரகேடுதான் காரணம் எனவும்பொதுமக்கள் தெரிவித்தனர். உடனடியாக பொதுக்கழிப்பிடத்தை அகற்ற வேண்டும் எனவும் இல்லையெனில்  அந்த  கழிப்பிடத்தை தாங்களே இடித்து அகற்றி விடுவவதாக கூறி பொதுமக்கள் ஓன்று சேர்ந்து மார்க்சிஸ்ட் கட்சியின் வடக்கு நகரக்குழு உறுப்பினர்கள் நாராயணன், முத்துசாமி தலைமையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து  தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்குவந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து ஓரு வாரத்திற்குள்
பயன்பாட்டில் இல்லாத இந்தகழிப்பிடம் இடிக்கப்படும்   எனவும் பாலன் நகர் குடியிருப்பு
பகுதிமுழுவதும்  சுத்தம் செய்து தரப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தனர்.
இதனையடுத்து பொதுமக்கள் போராட்டத்த கைவிட்டு கலைந்து சென்றனர்.

 

Leave A Reply