மைசூரு;
மத நல்லிணக்கத்தை பறைசாற்றும் வகையில் ‘மைசூரு தசரா விழா’ கொண்டாட்டத்தை, கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா முன்னிலையில் இஸ்லாமியக் கவிஞர் நிசார் அஹமது தொடங்கி வைத்தார்.நவராத்திரி விழா தொடங்கி விட்டதன் அறிகுறியாக, சாமுண்டி ஹில் பகுதியில் வியாழனன்று காலை, சாமுண்டீஸ்வரி அம்மனின் பஞ்சலோக சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து, கவிஞர் நிசார் அஹமது, முதல்வர் சித்தராமையா, பொதுப்பணித்துறை அமைச்சர் மஹாதேவப்பா, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தன்வீர் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள், கடவுளுக்கு மலர்தூவி தசரா விழாவை தொடங்கி வைத்ததாகவும் சாமுண்டீஸ்வரி கோவிலின் தீட்சிதர் தெரிவித்துள்ளார்.

தசரா விழாவையொட்டி, கலைக் கண்காட்சிகள், பூக் கண்காட்சி, புத்தகக் கண்காட்சி, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், பெண்களின் தாண்டியா நடனம் ஆகியவை நடைபெற்றன. சிக்மகளூரைச் சேர்ந்த பாடகி ராஜம்மாவிற்கு ராஜ்ய சங்கீதா வித்யான் விருதும் வழங்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: