தாராபுரம், செப் 20 –
சிபிஎம் திருப்பூர் மாவட்ட 22வது மாநாடு டிச.17 ஆம் தேதி துவங்குகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்ட 22 மாநாடு எதிர்வரும் டிசம்பர் 17, 18, 19 ஆகிய தேதிகளில் தாராபுரம் வேலவர் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதையொட்டி வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் புதனன்று தாராபுரத்தில் தாலுகா குழு உறுப்பினர் ஆர்.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிபிஎம் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி, திருப்பூர் மாவட்ட செயலாளர் கே.காமராஜ், மாநிலக்குழு உறுப்பினர் செ.முத்துக்கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.சுப்பிரமணியம், தாலுகா செயலாளர் என்.கனகராஜ் ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர். இதைத்தொடர்ந்து வரவேற்பு குழு தலைவராக ஆர்.வெங்கட்ராமன், செயலாளராக என்.கனகராஜ், பொருளாளராக பி.பொன்னுச்சாமி மற்றும் 55 பேர் கொண்ட வரவேற்பு குழு அமைக்கப்பட்டது. முன்னதாக, இக்கூட்டத்தில் மாநாட்டு நிதியாக ரூ.64 ஆயிரம் மற்றும் அரிசி, தேங்காய் மற்றும் காய்கறிகள் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகியிடம் வழங்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.