ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய ஜியோ பிசிக்கல் ஆராய்ச்சி நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 37 டெக்னீசியன் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technician
காலியிடங்கள்: 37
சம்பளம்: மாதம் ரூ.19,900 – 63,200
வயதுவரம்பு: 29.09.2017 தேதியின்படி 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி, டிரேடு தேர்வு மற்றும் பணி அனுபவம் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். பெண்கள், மாற்றுத்திறனாளிகள், எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ngri.org.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:  29.09.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ngri.org.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை படித்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

You must be logged in to post a comment.