சேலம், செப்.20-
சேலத்தில் எதிர்வரும் செப்.30ம் தேதி எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெறுகிறது. இதனையொட்டி அதிமுகவின் சார்பில் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்ஒருபகுதியாக அம்மாபேட்டை செங்குந்தர் மாரியம்மன் திருக்கோவில் மண்டபத்தில் மாநகர் மாவட்ட மாணவர் அணி மற்றும் தெற்கு சட்டமன்ற தொகுதி சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் 150க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் வழங்கினர்.

மேலும், சேலம் அழகாபுரம் பகுதியை சார்ந்த ஏரோபிக்ஸ் விளையாட்டு வீராங்கனை சுப்ரஜா ரஷ்யாவில் நடக்க இருக்கும் போட்டிகளில் பங்கேற்க உதவுமாறு சேலம் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் சக்திவேலிடம் மனு அளித்தார். இதனை பெற்றுக்கொண்ட அவர், தனது சொந்த பணம் ரூ.10 ஆயிரத்தை மாணவிக்கு வழங்கினார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், எம்.கே.செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: