இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய அறிவியல் மருத்துவ மையத்தின் (எய்ம்ஸ் AIIMS) உத்தர்கண்ட் மாநிலம் ரிஷிகேசில் செயல்படும் எய்ம்ஸ் மையத்தில் காலியாக உள்ள 305 அலுவலக உதவியாளர், ஸ்டாப் நர்ஸ், தொழில்நுட்ப உதவியாளர், ஹாஸ்பிடல் அட்டன்ட் , ஸ்டோர் கீப்பர் கம் கிளார்க் போன்ற பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து அக்டோபர் 16க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அதிகபட்சம் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியாக வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது நினைவில் கொள்க.
பி.எஸ்சி. நர்சிங், 3 ஆண்டு டிப்ளமோ நர்சிங் படிப்பு, பி.எஸ்சி. மெடிக்கல் லேப் டெக்னாலஜி, டிப்ளமோ மெடிக்கல் லேப் டெக்னாலஜி மற்றும் இதர அறிவியல், கலை பட்டப்படிப்புகளை படித்தவர்களுக்கும் சம்மந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். சில பணிகளுக்கு பணி அனுபவம் கோரப்பட்டுள்ளது.
குரூப்-பி பணிகளுக்கு ரூ.3 ஆயிரமும், குரூப்-சி பணிகளுக்கு ரூ.2 ஆயிரமும் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும். எஸ்சி, எஸ்டி. பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் அனைத்து பணிகளுக்கும் ரூ.1000 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.aiimsrishikesh.edu.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.10.2017.

Leave a Reply

You must be logged in to post a comment.