உயர்நீதிமன்றத்திற்கு வழங்கப்பட்ட  சிஐஎஸ்எப் பாதுகாப்பு மேலும்  ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழை வழக்காடுமொழியாக அறிவிக்கக்கோரி கடந்த ஆண்டு செப். 14ஆம் தேதி மதுரையை சேர்ந்த வழக்குரைஞர்கள் நீதிமன்ற அறையில் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து உயர்நீதிமன்ற பாதுகாப்பு தொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து, கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்துக்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது. அதன்பிறகு  மத்திய தொழில் பாதுகாப்பு படையின் பாதுகாப்பை நவம்பர் 2017வரை  நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கை புதனன்று (செப். 20) விசாரித்த  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி,  நீதிபதி சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு சிஐஎஸ்எப் பாதுகாப்பை மேலும் ஓராண்டிற்கு (நவம்பர் 2018) வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: