தர்மபுரி,

தர்மபுரியில் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே பொம்மிடியை சேர்ந்த 13 வயது சிறுமி தாமரை வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் இன்று காலை சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காய்ச்சல் காரணமாக தொடரும் உயிரிழப்புகளை தடுக்க தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.