புதுதில்லி;
நாடாளுமன்ற மக்களவை நெறிமுறைக் குழு தலைவராக பாஜக மூத்த தலைவர் அத்வானியை நியமித்து மக்களவைத் தலைவர் சுமித்ரா மகாஜன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே இக்குழுவின் தலைவராக அத்வானிதான் இருக்கிறார் என்ற நிலையில், அவர் மீண்டும் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டு உள்ளார். குழுவில் முன்பு இடம்பெற்றிருந்த 14 உறுப்பினர்களும் அப்படியே மீண்டும் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

அதேபோல மக்களவைத் துணைத்தலைவர் மு. தம்பிதுரையும், தனிநபர் மசோதாக்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பான குழுவின் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: