புதுக்கோட்டை,

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 8 பேரை, இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர்.

புதுக்கோட்டையை சேர்ந்த மீனவர்கள் 8 பேர் 2 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் 8 பேரையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி அவர்களை கைது செய்து அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்து சென்ற இலங்கை கடற்படையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே 19 தமிழக  மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: