மதுரை;
அதிமுக-வின் திருச்சி தொகுதி எம்.பி குமாருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக அதிமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் நடிகர் செந்தில் ஆகியோர் மீது திருச்சி குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தது.

இதனடிப்படையில் அவர்கள் கைது செய்யப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, கைது நடவடிக்கைக்கு எதிராக தினகரன், செந்தில் தரப்பில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இன்று இம்மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சுந்தர், அக்டோபர் 4-ஆம் தேதி வரை டிடிவி தினகரன், நடிகர் செந்தில் ஆகியோரை கைது செய்யக் கூடாது என்று இடைக்காலத் தடை விதித்தார்.

Leave A Reply

%d bloggers like this: