சென்னை,

தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழக பணியாளர் , நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலர் ஸ்வர்ணா வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக அரசு ஊழியர்கள் பணியின் போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என் உத்தரவிட்டுள்ளார். மேலும் அடையாள அட்டையில் ஊழியரின் பெயர், அவர் வகிக்கும் பதவி ஆகியவை தமிழ் மற்றும் ஆங்கிலம் என ஒன்றின் கீழ் ஒன்றாக இடம்பெற வேண்டும். இதற்கு ஏற்ப அடையாள அட்டையில் மாற்றம் செய்து வழங்க துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: