பழனி,
பழனி அருகே தேசியக்கொடி புகைப்படத்துடன் ஸ்மார்ட்கார்டு வழங்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
பழனி அருகே ஆயக்குடியில் தயாசுல்தான் என்பவருக்கு வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டில் அவரது புகைப்படத்திற்கு பதிலாக தேசியக்கொடி படம் இடம்பெற்றுள்ளது. முன்னதாக நடிகை காஜல், செருப்பு, விநாயகர் புகைப்படங்கள் தவறுதலாக அச்சிடப்பட்டிருந்த நிலையில் தற்போது தேசியக்கொடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அரசு ஊழியர்கள் அலட்சியத்தால் இதுபோன்று தவறுகள் ஏற்படுவதாக தயாசுல்தான் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்மார்ட் கார்டில் குளறுபடிகளை தடுக்கும் வரை ரேஷன் பொருட்கள் வாங்க ஸ்மார்ட் கார்டை கட்டாயப்படுத்தக் கூடாது என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.