சண்டிகர்,

ஃபரிதாபாத் மாவட்டத்தில் வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் 5 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

அரியானாவின் ஃபரிதாபாத் மாவட்டத்தில் உள்ள பல்வாலி கிராமத்தில் ஞாயிறன்று இரவு இரு குழுவினருக்கு இடையே வாகனம் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டது. அப்போது தகராறில் ஈடுபட்ட ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து காவல் ஆணையாளர் கூறுகையில் , இது சம்பவம் தொடர்பாக 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தகராறு நடந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு நடத்தியவரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது என்றார்.

Leave a Reply

You must be logged in to post a comment.