கரூர், செப்.17-
கரூரில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் மக்களவை துணைத்தலைவர் மு.தம்பிதுரை கூறியதாவது:  நவோதயா பள்ளிகள் திட்டத்தை ஜெயலலிதா இருக்கும்போது கூட ஏற்கவில்லை. 2016 ஜூலையில் புதுதில்லியில் நடைபெற்ற முதலமைச்சர்கள் மாநாட்டில்கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என குரல் கொடுத்தவர் ஜெயலலிதா. நாங்களும் அதே நிலைப்பாட்டில்தான் உள்ளோம். ஒருசில இடங்களில் நவோதயா பள்ளிகள் திறப்பதால் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியாது. தமிழக அரசு கல்வித் தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

நவோதயா பள்ளித்திட்டத் திற்கு செலவழிக்கும் தொகையை மாநில அரசுக்கு வழங்கினால் அதனை மாநில அரசு கல்வித்தரத்தை மேம்படுத்த பயன்படுத்தும். பொதுப்பட்டியலில் இருக்கும் கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர அதிமுக அரசு முயற்சி செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: