திருப்பூர், செப்.18 –
தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் 17-ஆவது அமைப்பு தினம் ஞாயிறன்று கடைப்பிடிக்கப்பட்டது. அவிநாசி நெடுஞ்சாலைத் துறை உட்கோட்ட அலுவலகம் முன்பு நடைபெற்ற அமைப்பு தின விழாவில் செயலாளர் ராமன் உள்ளிட்ட சாலைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கொடியேற்றத்தைத் தொடர்ந்து உறுதியேற்பு நிகழ்வு நடைபெற்றது.

இதில், தந்தை பெரியார் பிறந்த நாளில் சாதி மத பேதமற்ற உலகை படைக்கவும், உழைக்கும் மக்கள் உரிமை போராட்டத்தில் உறுதியோடு போராடவும், தமிழக அரசின் தனியார்மய கொள்கையினை முறியடிக்கவும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவும், தொழில் நுட்ப கல்வித்திறன் பெறாத, தொழில்நுட்ப ஊழியருக்கான ஊதியத்தை மாற்றியமைத்து பணப்பலன் பெற்றிடவும், கோரிக்கைகளை வென்றெடுக்க சமரசமில்லா போராட்டத்தை முன்னெடுப்பது என்று உறுதியேற்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.