பானாஜி,

கோவாவில் பொது இடங்களில் மது அருந்துவதற்கு தடை விதிக்க விதிக்கப்படும் என அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

கோவா தலைநகர் பனாஜியில் தூய்மை இந்தியா திட்டம் தொடர்புடைய நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசி அம்மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர், கோவாவில் பொது இடங்களில் மது அருந்துபவர்களால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்பட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வருகின்றன. இதுதொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட உள்ளது. விரைவில் பொது இடங்களில் மது அருந்த தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த 15 நாட்களில் இது நடைமுறைக்கு வரவுள்ளது. மதுக்கடை அருகில் மக்கள் மது அருந்துவது கண்டறியப்பட்டால் மதுக்கடைக்காரருக்கு அபராதம் விதிக்கப்படும் அல்லது கடையின் உரிமம் ரத்து செய்யப்படும். சாலையோரங்களில் மது அருந்துபவர்கள், பாட்டில்களை சாலையில் உடைத்துப் போட்டு விடுவதால் பொதுமக்களுக்கு பெரும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற சிரமங்களை களைவதால் சுத்தமும், சுகாதாரமும் பேணப்படும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: