திருப்பூர், செப்.18 –
கட்டுமானத் தொழிலாளர் நலவாரியத்தில் தேங்கிக் கிடக்கும் கேட்பு மனுக்களுக்கு காலதாமதம் செய்வதைக் கண்டித்து சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பயனாளிகளுக்கு விரைந்து பணப்பலன்களை வழங்க கேட்புமனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மணல் தட்டுப்பாட்டைப் போக்கி மணல் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஓய்வூதியத்தை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். மத்திய சட்டத்தில் நலவாரியத்தைச் செயல்படுத்த வேண்டும். இயற்கை மரணத்திற்கு ரூ.1 லட்சம், திருமண உதவி ரூ.50 ஆயிரம், கல்வி உதவித் தொகையை இரட்டிப்பாக்கி வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு திருப்பூர் மாவட்ட கட்டட கட்டுமானத் தொழிலாளர் சங்கத்தினர் தொடர் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள நலவாரிய அலுவலகம் முன்பாக திங்களன்று நடைபெற்ற போராட்டத்திற்கு சங்கத் துணைத் தலைவர் ப.கு.சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். இப்போராட்டத்தைத் மாநிலப் பொதுச் செயலாளர் டி.குமார் துவக்கி வைத்துப் பேசினார். இதில் நிர்வாகிகள் ஏ.ராஜன், செல்வகுமார், சி.ராஜன், பழனிசாமி, பத்மநாபன், சுப்பிரமணி, கொண்டப்பன், சந்திரன், பாப்பாத்தி உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: