திருப்பூர், செப். 18 –
திருப்பூர் அரசு மருத்துவமனை வெளிநோயாளிகள் பிரிவில் மருந்துகள் சரிவர வழங்கவில்லை என்று கூறி மருத்துவமனைக்கு வந்தோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் எதிரில் அரசு மருத்துவமனையின் வெளிநோயாளிகள் பிரிவு செயல்பட்டு வருகிறது. வாரத்தின் முதல் வேலை நாளான திங்கள்கிழமை காலை, வெளிநோயாளிகள் பிரிவு மருந்து வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்நிலையில் வரிசையில் காத்திருந்த பொதுமக்களுக்கு மருந்துகள் வழங்க காலதாமதம் செய்யப்பட்டதாகத் தெரிகிறது.இதனால் நோயாளிகள் உள்பட பலரும் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த நோயாளிகள் மற்றும் பொது மக்கள் 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனை எதிரில் தாராபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தெற்கு காவலர்கள் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave A Reply

%d bloggers like this: