கவுகாத்தி,

அசாம் மாநிலத்தில் படகு போட்டியை பார்க்க சென்றவர்களின் படகுகள் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் பத்து பேர் பலியாகினர்.

அசாம் மாநிலத்தில் உள்ள கோல்பாரா மாவட்டத்துக்குட்பட்ட சபோன் ஆற்றில் ஞாயிறன்று படகு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்க்க சென்ற சுமார் 50 பேர் 4 படகுகளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, வீசிய பலத்த காற்றால் நிலைதடுமாறிய படகுகள் ஆற்றில் கவிழ்ந்தன. இந்த விபத்தில் 6 சிறுவர்கள் உள்பட பத்து பேர் ஆற்றில் மூழ்கி பலியாகினர்.

Leave A Reply