புதுதில்லி, செப். 17-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ள ரித்த பிரதா கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கட்சியின் மேற்குவங்க மாநில செயலாளரும், அரசியல் தலைமை க்குழு உறுப்பினருமான டாக்டர் சூர்யகாந்த மிஸ்ரா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ரித்தபிரதா பானர்ஜி. கட்சியின் அமைப்புச் சட்டம் 19(13)ஆவது பிரிவின்கீழ் கடுமையான கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்படமுற்றாக வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

ரித்த பிரதா பானர்ஜி, கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதற்காக பிப்ரவரி கடைசியில் நடைபெற்ற கட்சியின் மேற்குவங்க மாநிலக்குழு கூட்டத்தில் வெளிப்படையாக எச்சரிக்கப்பட்டார். அவர், தவறுகளைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்றும், சமூக வலைத் தளங்களைத் துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டார். பின்னர், ஜூன் 1 – 2 தேதிகளில் நடைபெற்ற மாநிலக் குழுக் கூட்டத்தில் அவர் மீதான நான்கு முக்கிய குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்திட மூன்று பேர் அடங்கிய விசாரணைக் கமிஷன் அமைத்திடத் தீர்மானிக்கப்பட்டது. கட்சி அமைப்புச் சட்டத்தின் ஷரத்துக்களின்படி, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விசாரணை முடியும்வரை மூன்ற மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.

மாநிலக்குழுவில் அவர் தன்னைத் தற்காத்துக் கொள்வ தற்கான வாய்ப்புகளுக்கும் அனுமதிக்கப்பட்டடார். கட்சிதான் தன்னுடைய பாதுகாவலர் என்றும், கட்சி ஒழுங்குக்குக் கட்டுப்பட்டு நடப்பதாகவும், விசாரணைக் கமிஷன் அறிக்கையின் அடிப்படை யில் மாநிலக்குழு எடுக்கும் எவ்வகையிலான முடிவாக இருந்தாலும் அதற்குக் கட்டுப்படுவதாகவும் கூறினார். அவர்மீதான புகார்கள் வரு மாறு: (1) உட்கட்சி விவரங் களையும், விவாதங்களையும் ஊடகங்களுக்குச் தொடர்ந்து கசியவிட்டது. (2) பெண்களிடம் மிகவும் தரம் தாழ்ந்து நடந்து கொண்டு வந்தது. (3) வரு மானத்திற்கும் செலவினங் களுக்கும் இடையே மிகவும் பொருத்தமற்ற விதத்தில் வித்தியாசங்கள். (4) கட்சி உறுப்பி னருக்குப் பொருந்தாத விதத்தில் மிகவும் படாடோபமான வாழ்க்கை. ஊடகங்களில் ஒரு பிரிவு அவர்பக்கம் நின்று, மாநிலக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்காக மாநிலத் தலைமையையே விமர் சித்தது. விசாரணைக் கமிஷன் இவர் குறித்து விவரங்களைத் தெரிந்து வைத்திருந்த அனைத்துக் கட்சி உறுப்பினர்களிடமிருந்தும் சாட்சியங்களைப் பதிவு செய்தது. மேற்படி நான்கு குற்றச்சாட்டுகள் குறித்தும் தங்களுக்கு வந்திருந்த விவரங்கள் குறித்தும் அவர் நான்கு முறை விசாரணைக் கமிஷனால் விசாரிக்கப்பட்டார். அவருக்கு எதிராகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளில் பலவற்றை அவர் மறுக்கவில்லை என்ற போதிலும், தன்மீதான புகார்களின் உண்மை முகம் வெளிவந்த தற்காக அவர் கிஞ்சிற்றும் வருத்தம் அடைந்ததாகத் தெரிய வில்லை.

விசாரணைக் கமிஷன் தன்னுடைய அறிக்கையில் அவர்மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டு அனைத்தும் மெய்ப்பிக்கப் பட்டதாக முடிவு செய்தது. விசாரணைக் கமிஷன் முடிவின் அடிப்ப டையில் மாநிலக் குழு அவர்மீது குற்ற அறிக்கை தாக்கல் செய்தது. குற்றச்சாட்டிற்கு அவர் அளித்த பதில் முற்றிலும் பொய்யாக இருந்தது. அவர் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக மாநிலக்குழு பலமுறை முயற்சித்தது. அவர் தன்னைத் திருத்திக்கொள்ள மறுத்தது மட்டுமல்ல, கட்சி மீதும் அவதூறு சேற்றைப் பல்வேறு வழிகளில் வாரி இறைக்கத் தொடங்கிவிட்டார். விசாரணைக் கமிஷனின் முடிவுகளின்படி ஆகஸ்ட் 7 மற்றும் 8 தேதிகளில் நடைபெற்ற மாநிலக்குழுக் கூட்டத்தில் அவருக்குஎதிரான தண்டனை நடவ டிக்கைகள் குறித்து தீர்மானித்து, மத்தியக் குழுவிற்கும் தெரிவிக்கப்பட்டது. அவர் கடும்தண்டனைக்குத் உட்பட வேண்டிய வராக இருந்தபோதிலும், சில அம்சங்களைப் பரிசீலனை செய்து, அவர் கட்சி வாழ்க்கை யைத் தொடர வேண்டும் என்பதற்காக கடைசி நடவடிக்கையாக அதனை வைத்துக்கொள்ளலாம் என்று கட்சி கருதியதால் அவ ருக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எதுவும் எடுத்திடவில்லை.

மாநிலக்குழுவின் முடிவு மத்தியக் குழுவிற்குத் தெரி விக்கப்பட்டது. கட்சியின் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டு நடப்பதற்குப் பதிலாக, அவர் கட்சியின் மீது அவதூறுச் சேற்றை ஊடகங்களில் ஒரு பிரிவின் உதவியுடன் அள்ளிவீசத் தொடங்கி இருக்கிறார். செப்டம்பர் 11 அன்று ஓர் ஊடகத்தில் ஒரு தொலைக்காட்சி வரி சையில் நேர்காணலும் மேற்கொண்டிருக்கிறார். அதில் அவர் கட்சியின் எதிரிகளைப் போலவே கட்சியைக் கிண்டலடித்திருக்கிறார். இவை ஒரு கட்சி உறுப்பினரிடம் இருக்கக்கூடாத அம்சங்கள் மட்டுமல்ல,கட்சி விரோதிகள் கட்டவிழ்த்து விடும் அழுக்கடைந்த கதைகளைப் போன்றே அமைந் திருந்தன. இவ்வாறு கடுமையான கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமைக்காகவும், கம்யூ னிஸ்ட் எதிர்ப்பு நிலையினை எடுத்துள்ளமைக்காகவும், கட்சியின் மாநில செயற்குழு, செப்டம்பர் 13 அன்று ரித்தபிரதா பானர்ஜியை கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து நீக்குவது என்று தீர்மானித்திருக்கிறது.

(ஐஎன்என்)

Leave A Reply

%d bloggers like this: