தில்லி,

ரயிலில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது.

முன்னதாக ரயிலில் முன்பதிவு செய்து பயணிப்பவர்களுக்கான தூங்கும் நேரம் இரவு 10 மணியில் இருந்து காலை 7 மணிவரை இருந்தது. இந்நிலையில் பகலில் இருக்கையில் சிலர் தூங்குவதாக அடிக்கடி வரும் புகார்களை அடுத்து ரயிலில் தூங்கும் நேரம் குறித்து புதிய அறிவிப்பு ஒன்றை ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ளது.  அதன்படி ஏற்கனவே நடைமுறையில் இருந்த தூங்கும் நேரத்தில் ஒரு மணிநேரம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  ரயிலில் பயணிப்பவர்கள் இரவு 10 மணிமுதல் காலை 6 மணிவரை மட்டுமே தூங்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் உடல் நிலை சரியில்லாதவர்கள், கர்ப்பிணி பெண்கள் ஆகியோருக்கு இந்த கட்டுப்பாட்டில் இருந்து தளர்வு அளிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply