லக்னோ,

கோரக்பூர் மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் குழந்தைகள் உயிரிழந்தது தொடர்பாக, ஆக்ஸிஜன் சப்ளையரை காவலர்கள் இன்று கைது செய்தனர்.

உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள பாபா ராகவ் தாஸ் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில், மருத்துவமனை நிர்வாகம் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் புஷ்பா ஏஜென்சியிடம் ஆக்சிசன் சிலிண்டர்களுக்கான பணத்தை அளிக்க லஞ்சம் கேட்டதால், அந்த ஏஜென்சி ஆக்ஸிஜன் சப்ளையை நிறுத்தியது தெரியவந்தது.

இதுத் தொடர்பாகத் தேடப்பட்டு வந்த புஷ்பா ஏஜென்சியின் உரிமையாளர் மணீஸ் பண்டாரி என்பவரை டொயோரியா பகுதியில் காவலர்கள் இன்று கைது செய்துள்ளனர்.

Leave A Reply