சியோல்,

கொரியா ஓபன் பேட்மிண்டன் மகளிர் ஒற்றையர் பிரிவின்  இறுதி ஆட்டத்தில் இந்திய விராங்கனை சிந்து ஜப்பானின் நயோமியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

தென் கொரியாவின் சியோல் நகரில் கொரியா ஓபன் பேட்மிண்டன் தொடர் நடை பெற்று வருகிறது. இதில் பங்கேற்ற  இந்திய பேட்மிண்டன் வீராங்கனை   பி .வி.சிந்து சனியன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் சீன வீராங்கனை ஹி பிங்ஜியோவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதையடுத்து இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் அவர் ஜப்பானின் நயோமியை எதிர்கொண்டார். இந்த போட்டியில்  22-20, 11-21, 21-18 என்ற செட் கணிக்கில் நயோமியை வீழ்த்தி கொரியா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை கைப்பற்றினார் பி.வி.சிந்து.

இதன் மூலம் கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீராங்களை என்ற பெருமையை அடைந்தார் பி.வி.சிந்து.

 

Leave A Reply

%d bloggers like this: