மதுரை, செப்.17 –
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தமிழகத்தின் கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட இயக்குநர்கள், தலை வர்கள் மற்றும் கூட்டுறவாளர்கள் பங்கேற்ற மாநில அளவிலான சிறப்புக் கருத்தரங்கம் மதுரையில் செப்டம்பர் 17 ஞாயிறன்று நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் கம்யூனிட்டி ஹாலில் நடைபெற்றது.

‘கூட்டுறவை பாதுகாப்போம்’ என்ற முழக்கத்துடன் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன் வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு வசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலை வரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.பாலகிருஷ்ணன் கருத்தரங்கை துவக்கி வைத்து உரை யாற்றினார். விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய பொருளாளரும் கேரள சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான பி.கிருஷ்ண பிரசாத், முன்னாள் துணைப் பதிவாளர் கா.ராஜாமீரா, கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் இ.சர்வேசன் ஆகியோர்கருத்துரையாற்றினர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலபொதுச் செயலாளர் பெ.சண்முகம் வாழ்த்திப் பேசினார். மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் நிறைவுசெய்து சிறப்புரையாற்றினார்.

கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவரும் நேஷ னல் கூட்டுறவு சர்க்கரை ஆலை யின் இயக்குநருமான என்.பழனிச்சாமி நன்றி கூறினார். கருத்தரங்கில் தீர்மானங்களை முன்மொழிந்து கே.கிருஷ்ணன் உரையாற்றி னார். கூட்டுறவு தேர்தலை ஜன நாயகமாக நடத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளுக்கான தனிதேர்தல் ஆணையம் சுயேட்சையாக வும் சுதந்திரமாகவும் செயல்படு வதை உறுதி செய்ய வேண்டும். கூட்டுறவு நிர்வாகங்களின் ஜனநாயக செயல்பாட்டை உறுதிப்படுத்த வேண்டும். தேர்ந்தெடுக்கப் பட்ட நிர்வாகக்குழுக்களுக்கு உரிய அதிகாரம் வழங்கும் வகையில் சட்டத்திருத்தங்கள் மேற் கொள்ள வேண்டும். கூட்டுறவு நிறுவனங்களில் நடைபெறும் நிர்வாகச்சீர் கேடுகளை களைந்திட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கருத்தரங்கம் வலியுறுத்தியது.

Leave A Reply