காந்திநகர்,

குஜராத்தில் நர்மதா நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

குஜராத்தின் நவகம் பகுதியில் நர்மதா நதியின் குறுக்கே  ரூ.16,000 கோடி  செலவில் கட்டப்பட்டுள்ள  சர்தார் சரோவர் அணையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

இந்த அணைக்கு கடந்த 1961 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த 56 ஆண்டுகளாக பல்வேறு காரணங்களால் தாமதமான இந்த திட்டம் தற்போது நிறைவடைந்ததுள்ளது. இந்த அணை உலகின் 2 ஆவது மிகப்பெரிய அணையாகும்.  இதன் மூலம் குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களை சேர்ந்த 4 கோடிக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் தேவை பூர்த்தியடைவதுடன், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாசன வசதியும் பெற முடியும்.

குஜராத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து, குஜராத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply