·

பச்சைப் பொய்.

சாரணர் இயக்கத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ள மணி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்று எச்.ராஜா படு தோல்வி அடைந்த மூன்று மணி நேரத்திற்கு பிறகு, பக்தாள், புது கதையை கூறி வருகின்றனர். அதாவது தற்போது வெற்றி பெற்றுள்ள மணியும், சங் பரிவாரை சேர்ந்தவர்தானாம்.

இந்த செய்தி வெளியானது முதல் தொடர்ந்து மணியோடு உரையாடிய பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒருவரை பிடித்தேன். இந்த செய்தி குறித்து மணியிடமே கேட்டுள்ளார். அவர் கூறியது “சார், நான் பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவன் நான் எப்படி ஆர்எஸ்எஸ் அல்லது அதன் சார்பான இயக்கத்தில் உறுப்பினராக இருக்க முடியும் ? நான் உண்மையில் திராவிட அரசியலை பின்பற்றுபவன். எந்த இயக்கத்தையும் சேர்ந்தவன் கிடையாது. ஆனால் எனக்கு திராவிட அரசியல்தான் பிடித்த சித்தாந்தம் ” என்று கூறியுள்ளார்.

கீழே விழுந்த மண்ணை துடைத்துக் கொண்டு, எத்தனை பெரிய பொய்யை உண்மையென்று பரப்ப முயற்சி செய்கிறார்கள் பார்த்தீர்களா.. பொய் அம்பலப்படும் என்று தெரிந்தும் கூசாமல் பொய் கூறுவதுதான் பக்தாளின் வேலை.

– Shankar A

Leave A Reply