நைஜர்,
நைஜீரியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகி உள்ளனர்.
நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நைஜர் நகரில்  உள்ள கெபி என்ற இடத்தில் இருந்து ஒரு படகில் நேற்று ஏராளமானோர் புறப்பட்டனர்.
படகு நடு ஆற்றில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்கி தத்தளித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மீட்பு படையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்தனர். மேலும் சிலர் உயிருடன் மீட்கப்பட்டனர். கடலில் மூழ்கியவர்களில் 23 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்றது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

அளவுக்கு அதிகமாக படகில் பயணிகளை ஏற்றியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

Leave A Reply