ஜோஹன்ஸ்பெர்க்;
தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர நம்பிக்கை வீரர்ஜே.பி.டுமினி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.ஆனாலும் ஒருநாள் மற்றும் கூ20 கிரிக்கெட்டில் தொடர்ந்து ஆடுவதாக கூறியுள்ளார்.

டுமினி டெஸ்ட் போட்டியில் 2008ஆம் ஆண்டு அறிமுகமானார்.இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 6 சதங்கள் மற்றும் பகுதி நேர பந்து வீச்சில் 42 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்

2008-ல் பெர்த் டெஸ்ட் போட்டியான தனது அறிமுகப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த 414 ரன்களை டிவில்லியர்ஸ் உடன் இணைந்து விடா முயற்சியுடன் விரட்டி வெற்றி இலக்கை அடைந்து சாதனை படைத்தார்.டெஸ்ட் போட்டியில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 166.

இவரது கிரிக்கெட் வாழ்க்கை சாதனை, காயம், நீக்கம், மீண்டும் வருவது என்பதாகவே அமைந்தது. 12 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு 2010-ல் டுமினி அணியிலிருந்து நீக்கப்பட்டார். மீண்டும் 2012-ல் திரும்பி வந்தார். ஓய்வு குறித்து டுமினிகூறுகையில்,“நீண்ட யோசனைகளுக்குப் பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக முடிவெடுத்துள்ளேன். தென் ஆப்பிரிக்க அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளில் ஆட வாய்ப்புக் கிடைத்தது எனக்கு வாய்த்த பெருமையே.எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி” என்றார்.

Leave A Reply