நெல்லை,
நெல்லை அருகே சுற்றுலா பேருந்து கவிந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஆந்திர மாநிலம் தெனாலியில் இருந்து 60 பேர் பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். மதுரையில் இருந்து கன்னியாகுமரிக்கு சென்ற இவர்கள் பேருந்தை நெல்லை நான்கு வழி சாலை சந்திப்பில் சாலை ஓரம் நிறுத்தியுள்ளனர். அப்போது மார்த்தாண்டத்திற்கு சிமெண்ட் ஏற்றி சென்ற லாரி பேருந்தின் பின்புறம் மோதி விபத்தி ஏற்பட்டுள்ளது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்தினமாணிக்கம், வர்த்தினி, நாகரத்தினம், வெங்கடராமராவ், ராம்மோகன ராவ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். மேலும் படுகாயமடைந்த 10 பேர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தகவல் அறிந்த சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் லாரி ஓட்டுநர் ரசூல்ராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply