டேராடூன்,
எளிய கணக்கிற்கு விடை தெரியாத கல்வி அமைச்சர் சரியான பதில் சொன்ன ஆசிரியரை, திட்டிய வீடியோ வைரலாகி வருகிறது.

உத்தரகாண்ட் மாநில கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே, அரசுப் பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கணித ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அந்த வகுப்பறைக்கு சென்ற அமைச்சர், ஆசிரியரிடம் கேள்வி ஒன்றை கேட்டார்.

அதாவது -1 மற்றும் -1 இரண்டையும் கூட்டினால் விடை என்ன? என்பதாகும். அதற்கு ஆசிரியர் -2 என்ற பதிலை அளித்தார். ஆனால் விடை தவறு என்று கூறிய அமைச்சர், விடை 0 என்று குறிப்பிட்டார். மேலும் ஆசிரியை கைடு புத்தகம் வைத்து பாடம் நடத்தி வருவதாக கூறி, கடுமையாக திட்டியுள்ளார். இந்த சம்பவத்தை அங்கிருந்த பத்திரிகையாளர்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலை தளங்களில் வெளியிடப்பட்டுள்ளதால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply