பஜகோவிந்தம் பாடி, பரிகாரத்துக்கு அலைந்து பார்த்தும் ஒன்றும் ஆகாமல், கடைசியில் அந்த நீதிபதி, பிரபல மனநல மருத்துவரிடம் போனார்.

மருத்துவர் அவரிடம் “என்ன பிரச்சினை? “ என்று கேட்டார்.

“படுத்து கண்ணை மூடினால் மூஞ்சில காறி காறித் துப்புறாங்க டாக்டர்”

டாக்டர் சிரித்து, பின் அடக்கியவாறு சுவாரசியம் காண்பித்து, “ஒவ்வொரு நாளுமா அப்படிக் கனவு வருது!” எனக் கேட்டார்.

“ஆமா, ஒவ்வொரு நாளும் வருது. ஆனா வேற வேற ஆளுக வந்து துப்புறாங்க“

“ஆச்சரியமா இருக்கே. அவங்க யாராவது தெரிஞ்சவங்களா இருந்தாங்களா?”

“அடையாளம் தெரில…”

“சரி….. அவங்க துப்பினதும் நீங்க என்ன செஞ்சீங்க?”

“நீதிமன்ற அவமதிப்பு வழக்கு போடுவேன்னு சொன்னேன்…….”

“…………….. “

“என்ன டாக்டர், நீங்களும் துப்புறீங்க?”

#சொற்சித்திரம்

-Mathava Raj

Leave A Reply