கோவை மாவட்டம் காருண்யா நகர் பகுதியில் 4 சக்கர வாகனம் ஓட்டி வந்த நபருக்கு, ஹெல்மெட் அணியவில்லை என காருண்யா நகர் காவல் துறையினர் அபராதம் விதித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ஆலாந்துறை பகுதியை சேர்ந்தவர் கர்ணன். இவர் டாடா ஏஸ் (tata ace) வாகனத்தை வைத்துள்ளார்.இவர் கடந்த 13 ம் தேதி டாடா ஏஸ் வாகனத்தில் காருண்யா நகர் சென்ற போது, காருணயா நகர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளார். டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களை சரி பார்த்துள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்த நிலையிலும் வாகனத்தை விடுவிக்க 300 ரூபாய் பணம் கேட்டுள்ளார். கர்ணன் பணத்தை கொடுக்க மறுக்கவே, ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 300 ரூபாய் அபராதம் விதித்தார் உதவி ஆய்வாளர் சங்கர நாராயணன்.அபராததினை உடனடியாக கட்டவில்லை என்றால் வழக்கு பதிவு செய்து விடுவதாக கூறி அபாரத தொகையை வலுக்கட்டாயமாக பெற்றுக்கொண்டதாக கூறப்படுகின்றது.இந்நிலையில் பாதிக்கப்பட்ட கர்ணன் காவல் துறை கொடுத்த ரசீதை சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். இது பரப்பப்பினை ஏற்படுத்தியுள்ளது..

Leave A Reply

%d bloggers like this: