சாலைகளாக மறுவரையறை செய்யாமல்  திறக்கப்பட்ட 1700 மதுக்கடைகளை மூடக் கோரிய வழக்கின் தீர்ப்பை செவ்வாயன்று (செப். 19) வழங்குவதாக உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவினால் தமிழகத்தில் 2,800 மதுக்கடைகள் மூடப்பட்டன. 1,183 மதுக்கடைகள் வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டன.

இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் சண்டிகரில் மாநில சாலைகள் மாவட்ட சாலைகளாக மாற்றப்பட்டு மதுபானக் கடைகள் திறக்கப்படுவது தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம் சில திருத்தங்கள் கொண்டு வந்தது.  இந்த உத்தரவை தவறாக பயன்படுத்தி தமிழகத்தில் சாலைகளை மறுவரையறை   செய்யாமல் மீண்டும் 1700 கடைகள்  திறக்கப்பட்டன.

இதை எதிர்த்து வழக்குரைஞர் பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை வெள்ளியன்று (செப். 15) விசாரித்த  தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு செவ்வாயன்று (செப் 19) தீர்ப்பு வழங்குவதாக தெரிவித்தது.

Leave A Reply

%d bloggers like this: