லக்னோ;
உத்தரபிரதேச மாநிலத்தில், இஸ்லாமிய மார்க்க கல்வியைப் போதிக்கும் 46 மதரஸாக்களுக்கு வழங்கப்பட்டு வந்த சலுகைகளை, சாமியார் ஆதித்யநாத் தலைமையிலான மாநில அரசு நிறுத்தியுள்ளது.தற்போது உத்தரபிரதேசம் மாநிலத்தில் 560 மதரஸாக்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இவற்றில் 46 இந்த மதரஸாக்களின் செயல்பாட்டில் முறைகேடுகள் இருப்பதாக கூறி இந்த நடவடிக்கையை ஆதித்யநாத் அரசு எடுத்துள்ளது.

மாவட்ட மாஜிஸ்திரேட், மாவட்ட கல்வித்துறை ஆய்வாளர் மற்றும் மாவட்ட சிறுபான்மை நல அலுவலர்கள் இணைந்த கூட்டு குழு, விசாரணை நடத்தி அளித்த அறிக்கையின் பேரிலேயே மானியம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மதரஸாக்களுக்கான மானியங்கள் நிறுத்தப்பட்டதற்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. “பாஜக மற்றும் காங்கிரஸ் கொள்கைகளுக்கு இடையிலான வேறுபாடு என்னவென்றால், காங்கிரஸ் கட்சி அனைத்து மதங்களுக்கும் மதிப்பளிக்கும், ஆனால் பாஜக மற்றும் அதனுடைய தலைமை எந்தவொரு மதத்திற்கும் மதிப்பளிக்காது” என காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் கூறி உள்ளார்.கடந்த ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி, மதரஸாக்களில் தேசியக் கொடி ஏற்றி, கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று ஆதித்ய நாத் உத்தரவிட்டிருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சிகளை கண்காணிக்க அதிகாரிகளை நியமித்த ஆதித்யநாத், கலாச்சார நிகழ்ச்சிகளை வீடியோ மூலம் பதிவு செய்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இது முஸ்லிம்களை ஒடுக்கும் உள்நோக்கம் கொண்டது என்று அப்போது எதிர்ப்புகள் எழுந்தன.

இந்நிலையில்தான், தற்போது 46 மதரஸாக்களுக்கான மானியங்களை நிறுத்தி, உத்தரபிரதேச பாஜக அரசு உத்தரவிட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: