சென்னை போன்ற பெருநகரங்களில் நிலத்தடி நீரின் தன்மை மோசமாக உள்ளதால் குடிநீர் சுத்திகரிப்பு கருவிகளின் தேவை அதிகரித்துள்ளதாக  ஏசி தயாரிப்பில் முன்னணியில் உள்ள புளூ ஸ்டார் நிறுவன இணை நிர்வாக இயக்குநர் பி. தியாகராஜன் கூறியுள்ளார்

அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் கொண்ட 21 வகையான குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளை சென்னையில் அறிமுகம் செய்தபின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பாதுகாப்பான குடிநீரைப் பருக வேண்டும் என்ற விழிப்புணர்வு மக்களிடம் அதிகரித்துள்ளது என்றார். இருப்பினும் மாசடைந்த நிலத்தடிநீர், மற்றும் குடிநீர்தட்டுப்பாடு ஏற்படும் போது கிடைக்கும் தண்ணீர் பெரும்பாலும் மோசமாக இருப்பதால் குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகளை பொதுமக்கள் நாடவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்றார். இதன் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக இந்த சாதனங்களின் சந்தையின்மதிப்பு அதிகரித்துள்ளது என்றும் இது ஆண்டுக்காண்டு 15 விழுக்காடு வளர்ந்து வருவதாகவும் அவர் கூறினார்.

குடிநீர் சுத்திகரிப்புக் கருவி தயாரிப்பில் கடந்த ஆண்டு முதல் ஈடுபட்டு வருவதாகவும்  இதுவரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கருவிகளை விற்பனை செய்துள்ளோம். அடுத்த மூன்றாண்டுகளில் இந்திய சந்தையில் புளூ ஸ்டாரின் பங்களிப்பு 10 சதவீதமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு பிரிவு மக்களைக் கவரும் வகையில், ரூ. 7,900 முதல் ரூ.44,900 விலை கொண்ட மொத்தம் 21 வகையான குடிநீர் சுத்திகரிப்புக் கருவிகள் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் இவற்றில் தொடுதிரை, “சைல்டு லாக்’, “வாய்ஸ் கன்ட்ரோல்’ என அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் இருப்பதாகவும் அவர் கூறினார். விற்பனைக்குப் பிறகும் வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க தமிழகம் முழுவதும் 170 சேவை மையங்களும், சென்னையில் மட்டும் 50 சேவை மையங்களும் உள்ளன என்றார்.

படம் பூளுஸ்டார்

Leave A Reply

%d bloggers like this: