அகமதாபாத்
புல்லட் ரயில் திட்டம் ஏழைகளின் கணவுத்திட்டமல்ல பணக்காரர்களின் கனவுத்திட்டம் என்று பா ஜ க ஆதரவுக் கட்சியான சிவசேனாவே கடுமையாக சாடியுள்ளது.
நேற்று இந்திய – ஜப்பான் கூட்டு முயற்சியான புல்லட் ரயிலுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.   பிரதமர் மோடி, “இந்த அதிவேக ரயில் பலருக்கு வேலை வாய்ப்பையும் நாட்டுக்கு முன்னேற்றத்தையும் அளிக்கும்.   இது இரு நகரங்களை இணப்பது மட்டுமின்றி நூற்றுக்கணக்கான கிமீ தூரத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களையும் இணைக்கும்.  இது சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இனி நம் நாடு துரித வேகத்தில் முன்னேற்றம் அடையும்” என்று தனது உரையின் போது சிலாகித்தார்.
இந்த புல்லட் ரயில் திட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.   இந்நிலையில் பா ஜ கவின் கூட்டணிக்கட்சியான சிவசேனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது .   சிவசேனா தலைவர் உதவ் தாக்கரே புல்லட் ரயில் திட்டத்தை ஒரு தேவையற்ற ஏமாற்று வேலை என சாடியுள்ளார்.. மேலும் இது ஏழைகளின் கனவுத் திட்டமில்லை எனவும், பணக்காரர்களின் கனவுத் திட்டம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
சிவசேனாவின் அதிகார பூர்வ பத்திரிகையான சாமனாவில் இது குறித்து வந்துள்ள செய்தியில், “இந்த புல்லட் ரெயிலுக்கான செலவுத் தொகையும், நிலமும் கொடுக்கப் போவது இந்தியாவின் இரு மாநிலங்களான மகாராஷ்டிராவும், குஜராத்தும்.  ஆனால் முழுப்பயனும் அடையப் போவது ஜப்பானின் டோக்யோ தான்.  இதிலுள்ள ஏமாற்று வேலைகளையும், கொள்ளையடிக்கப் போவதையும் மறந்து அனைவரும் மோடியை பாராட்டுகின்றனர்.
புல்லட் ரயில் திட்டம் பொது மக்களுக்கு எந்த ஒரு நன்மையையும் தரப் போவதில்லை. இது குஜராத் தொழிலதிபர்களுக்கு தேர்தலை முன்னிட்டு தரப் போகும் புதுச் சலுகை.  முந்தைய பிரதமர் நேரு இது போல அல்லாமல் நமது நாட்டுக்கு நலனுக்காக பல திட்டங்களை கொண்டு வந்தார்.  பக்ராநங்கல், பாபா அணு ஆராய்ச்சி நிலையம் ஆகியவை போல் இந்த திட்டம் நிச்சயம் நன்மை தராது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: