பீடித்தொழிலாளர் சங்கம் சிஐடியுவின்  7வது அகில இந்திய பிரதிநிதி மாநாடுகள் வேலூரில் செப். 15 அன்று தோழர் நிஜாமூதீன் நினைவரங்கில் துவங்கியது.

அகில இந்திய துணைத்தலைவர் தோழர் கேபி.சகாதேவன் மாநாட்டுக் கொடியினை எழுச்சி முழக்கங்களுக்கிடையே ஏற்றி வைத்தார். அதனைத் தொடர்ந்து ஸ்தூபிக்கு மலர்அஞ்சலியும்  வீரவணக்கமும் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து  துணைத் தலைவர் தோழர்.ராஜாங்கம் அஞ்சலி உரை நிகழத்தினார். வரவே

ற்புக்குழுத் தலைவர் தோழர்.ஏ.நாராயணன் வரவேற்றார்.  ஏஐடியுசி பீடித்  தொழிலாளர் சங்க  அகில இந்திய பொதுச் செயலாளர் எஸ். காசிவிஸ்வநாதன் வாழ்த்துரை வழங்கினார். சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் தேபஷிஷ்ராய் செயலாளர் அறிக்கையையும், பொருளாளர்

பரஸ் பாசு நிதிநிலை அறிக்கையையும் முன்மொழிந்தனர்.

சிஐடியு அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் மாநாட்டை துவக்கி வைத்துப் பேசினார்.அதன் சுருக்கம் வருமாறு:- பீடித்தொழிலாளர்களுக்கு கூலி, இன்சூரன்ஸ்  போன்ற பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்வாதாரத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கின்றனர். பீடி, குட்கா போன்றவை உடல் நலத்திற்குத் தீங்கு என்றாலும் பெரும்பகுதித் தொழிலாளர்கள் வாழ்க்கையை தள்ளுவதற்கே இத்தொழிலில் ஈடுபடுகின்றனர். புகையிலை தீங்கு எனக்கூறும் அரசு மாற்றுத்தொழில் செய்திட இவர்களுக்கு வழிகாட்டவில்லை. தொழில் சார்ந்த பல்வேறு பிரச்சனைகளால் ஏராளமான தொழிலாளர்கள் இத்தொழிலை விட்டு வெளியேறி வருகின்றனர். ஜிஎஸ்டி, வேலையின்மை, அரசு முதலீடு குறைப்பு போன்றவை அனைத்து தொழிலாளர்களையும் பாதிக்கிறது.

பீடித்தொழிலாளர் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு 1975 இல் இதே வேலூர் நகரில் நடைபெற்றுள்ளது. அந்த மாநாட்டை பீடித் தொழிலாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர்களக இருந்த தோழர்கள் வி.கே.கோதண்டராமன், கே.ஆர்.சுந்தரம், வே.கண்ணன், டி.ஆர்.கோபாலன், ஆகியோர் பொறுப்பேற்று நடத்தியுள்ளனர். பி.டி ரணதிவே, ஆர்.உமாநாத், விமலா ரணதிவே ஆகியோர் பங்கேற்றுள்னர்.

விவசாயிகள் எழுச்சி
நாடு முழுவதும் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக ஆளும் ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் கடந்த 30 நாட்களுக்கு மேல் “ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம்” என விவசாயிகள் இரவும்பகலும் போராடி வருகின்றனர். அந்த மாநில அரசு திண்டாட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு, மத்தியப்பிரதேசத்திலும் விவசாயிகள் போராட்டம் வலுவாக நடைபெற்று வருகின்றது. 50 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய நாடு இப்படிப்பட்ட  எழுச்சியை சந்தித்து வருகிறது.

68 மணி நேரம் ஸ்தம்பித்த பெங்களூர்
இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில் வேலை நேரம் அதிகரித்ததைக் கண்டித்து 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 68 மணி நேரம் நகரை ஸ்தம்பிக்க வைத்தனர்.

1991  முதல் 2016 வரை ஆண்டுதோறும் நடந்த தேசம் தழுவிய பல்வேறு பொது வேலை நிறுத்தப் போராட்டங்களில் அனைத்து தொழிற்சங்கங்களும் பங்கேற்றன. பாஜகவின்  பிஎம்எஸ் தொழிற்சங்கம் ஒரு போராட்டத்தில் மட்டுமே பங்கேற்றது. இதுவரை தொழிலாளர் சட்டங்கள் 42 முறை திருத்தப்பட்டுள்ளன. ஆனால் இது பற்றி தொழிற்சங்கங்களிடம் பேசாமல் கார்ப்பரேட் முதலாளிகளிடம் அரசு பேசுவது அவர்களுக்கு ஆதரவு என்பது வெளிப்படை.

வரவு 1.2 லட்சம் செலவு 10 லட்சம்
இதுவரை 1.2 லட்சம் வேலைகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஆனால், இதே காலத்தில் 10 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இது போன்ற சமச்சீரற்ற வளர்ச்சியை எதிர்த்து ஒடுக்கப்பட்ட சமூகம் போராட வேண்டும். பல மொழி, இனம், பிரதேசத்தை சார்ந்தவர்க ளாக நாம் இருந்தாலும் நாம் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்பது நம் மீது திணிக்கப்படுகிறது. இதற்கு எதிராகவும் கல்புர்கி, கவுரி லங்கேஷ்கர் என வகுப்பு வாதத்திற்கு எதிராகப் பேசுபவர்கள், எழுதுபவர்கள் மீது நடத்தப்படும் வன்முறைகளை எதிர்த்தும் நாம் போராட வேண்டும்.

மூலதனம்
1867 செப் 14 அன்று மாமேதை கார்ல்மார்க்ஸ் மூலதனம் நூலை வெளியிட்டார். 150 ஆண்டுகள் கழித்து நாம் நம்முடைய 7வது மாநாட்டை நடத்துகிறோம். மார்க்சியத்தைப் பயின்று கொண்டே நம் வாழ்விற்காக இடதுசாரிப் பாதையில் நாம் போராட வேண்டும் என்றார்.

Leave A Reply

%d bloggers like this: