கோவை, செப்.15-
டாஸ்மாக் ஊழியர்களுக்கு நடப்பாண்டில் 40 சதவீத போனஸை ஒரே தவணையில் வழங்கக்கோரி கோவையில் டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நடப்பாண்டில் 40 சதவீதம் போனசை ஒரே தவணையில் வழங்க வேண்டும். பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு வாரிசு வேலை மற்றும் இபிஎப் உள்ளிட்ட பணிக்கொடைகளை வழங்க வேண்டும். எட்டு மணிநேர வேலை, வார, தேசிய விடுமுறை தினங்களில் விடுமுறை அளித்திட வேண்டும். காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று கோவை கவுண்டம்பாளையத்தில் உள்ள டாஸ்மாக் நிறுவன தலைமை அலுவலகம் முன்பு சிஐடியு சங்கத்தின் தலைமையில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு டாஸ்மாக் ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் எஸ்.மூர்த்தி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜான்அந்தோனிராஜ் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார். மேலும், மாவட்ட பொருளாளர் எஸ்.ராமகிருஷ்ணன், சம்மேளனக்குழு உறுப்பினர் செந்தில்பிரபு மற்றும் கரியபட்டன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Leave A Reply

%d bloggers like this: