ஜிமிக்கி, கம்மல் எல்லாம் வைரல் ஆகும் காலத்தில் இதுபோன்ற போராளிகள் வெளிச்சம் பெறுவது அர்த்தமானது.

நீட் தேர்வை எதிர்த்து போராடி, காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறார் நீதிமன்றத்தில், நீதிபதிகளின் கேள்விகளுக்கு சரியாகவும், துணிவாகவும் பதிலளித்த மணிக்குமார் குறித்து நேற்று பகிர்ந்திருந்தேன். அவரது முகம் பார்க்க ஆசை இருந்தது.

இன்று தோழர் Kanagaraj Karuppaiah அவரது வீட்டிற்கு சென்று சந்தித்து இருக்கிறார். அவர் வாழும் தெரு, அவரது வீடு, அவரது பெற்றோர் எல்லோரையும் பார்க்கும்போது, நிரஞ்சனாவின் ‘நினைவுகள் அழிவதில்லை’ நாவலின் ஆரம்பப் பக்கங்கள் நினைவுக்கு வந்து சென்றன.

அவரது பெயர் மணிக்குமார் இல்லை. மணி.

கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வெளியே வந்த பின்னர், தன் SFI தோழர்களோடு மாலையணித்து நிற்கும் காட்சி, அப்படியொரு நம்பிக்கையை, சந்தோஷத்தை தருவதாக இருக்கிறது.

வாழ்க மணியும், மணியின் தோழர்களும்!

Mathava Raj

Leave A Reply