மதுரை,
ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் நடத்தி வந்த வேலை நிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது என அச் சங்க  நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சேகரன் ஜாக்டோ ஜியோ போராட்டத்தால் மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு மீது விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப் பின் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர்.

இருப்பினும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு எந்த தீர்வும் காணப்படாத நிலையில் வேலை நிறுத்தத்தை எந்த அடிப்படையில் கைவிட முடியும் என நீதிமன்ற தடையை மீறி அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் தொடர்ந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மதிக்காத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை கோர்ட்டு அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று மீண்டும் வக்கீல் சேகரன்  மனுத்தாக்கல் செய்தார்.

மனுவை பரிசீலித்த நீதிபதிகள் ஐகோர்ட்டின் தடை உத்தரவு நோட்டீசை சம்பந்தப்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு சென்னை  மாநகர போலீஸ் கமிஷனர் வழங்க உத்தரவிட்டார்.

மேலும் தமிழ்நாடு ஆசிரியர்-அரசு ஊழியர் சங்கங்களின் நடவடிக்கை குழு ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தலைவர், முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள்,  சங்கத்தலைவர், தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தலைவர் ஆகியோர் 15-ந் தேதி (இன்று) ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.

அதன்படி சங்க நிர்வாகிகள் இன்று மதுரை உயர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். வழக்கு 11 மணியளவில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது நீதிபதிகள் பொதுநலன் கருதி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உடனே பணிக்கு திரும்ப வேண்டும். வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றால் தலைமை செயலாளர் முன்னிலையில் வருகிற திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறினர். அப்போது வாதிட்ட அரசு வழக்கறிஞர் ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகளும் அரசு தலைமை வழக்கறிஞரும் சென்னை தலைமை செயலகத்தில் பேச்சு வார்த்தை நடத்திக்கொள்ளலாம் என தெரிவித்தார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள் அரசு தலைமை செயலாளர் நேரில் மதுரை நீதிமன்ற கிளையில் வரும் 21ம் தேதி ஆஜராகி பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என தெரிவித்னர்.

இதையடுத்து ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பிற்பகல் 2 மணிக்குள் அரசு ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்ல  உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பேச்சுவார்த்தைக்காக வருகிற 21 ந்தேதி தலைமை செயலாளர்  நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதைத்தொடர்ந்து ஜாக்டோ ஜியோ வின் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave A Reply

%d bloggers like this: