சர்க்கரையும் மற்றும் பிற இனிப்பூட்டிகளும் நமது உணவு முறையில் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்கும் போதிலும் அளவுக்கு அதிகமாக சர்க்கரையை உட்கொள்வது, நீரிழிவு (சர்க்கரை நோய்), உடற்பருமன் மற்றும் வீக்கம் போன்ற வாழ்க்கைமுறை நோய்கள் ஏற்படுவதற்கு வழிவகுக்கும்.

கனடாவில் ஒரு மரத்தின் பட்டையில் இருந்து தயாரிக்கப்படும் 100 விழுக்காடு  தூய்மையான மேபிள் சிரப், சர்க்கரை மற்றும் பிறசெயற்கையான இனிப்பூட்டிகளுக்கு மாற்றாக இருக்கிற ஒரு ஆரோக்கியமான பொருள் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.  நேர்த்தியான செய்முறை விளக்கத்தின் மூலம் மேபிள் சிரப்பின் நற்குணங்களையும் பயன்களையும் ஊட்டச்சத்து நிபுணர்கள் விளக்கினர்.

தூய்மையான மேபிள் சிரப்பை பயன்படுத்தி நமது இல்லங்களிலேயே எளிதாக செய்யக்கூடிய சில உணவுவகைகளை பிரபல ஊட்டச்சத்து நிபுணரும், நலவாழ்வு ஆலோசகருமான அஞ்சு சூட் சென்னையில் செய்து காட்டினார்.   இனிப்பு மற்றும் காரமுள்ளஉணவுகள் இரண்டிலு மேபிள் சிரப்பை சேர்த்துசமைப்பது எவ்வளவு எளிதானது என்பதை சென்னையில் உள்ள பிரபல உணவகத்தின் தலைமை சமையலர்  சித்தார்த்தன் செய்முறையோடு விளக்கினார்.

Leave A Reply